தலீபான்களின் ஒடுக்குமுறையால் ஆப்கானிஸ்தான் பெண்களின் வாழ்க்கை அழிந்து வருகிறது - ஆய்வில் தகவல்

தலீபான்களின் கொள்கைகளால் லட்சக்கணக்கான பெண்கள் அவர்களின் உரிமையை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-28 11:40 GMT

Image Courtesy : AFP

காபுல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர்.

பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை, பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது, பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என அங்கு ஏற்கனவே பல கடுமையான உத்தரவுகளை தலீபான்கள் பிறப்பித்துள்ள்ளனர்.

இந்த நிலையில் தலீபான்களின் மனித உரிமைகள் மீதான ஒடுக்குமுறையால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை சீரழிந்து வருவதாக லண்டனை சேர்ந்த பன்னாட்டு மன்னிப்பு அவை உரிமைகள் குழு தங்கள் ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தலீபான்களின் கொடூரமான கொள்கைகளால் லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் பாதுகாப்பு மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கான அவர்களின் உரிமையை இழந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலீபான்களின் இந்த கொள்கைகள் ஒடுக்குமுறை அமைப்பை உருவாக்குவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் பாகுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்