3 நாட்களுக்கு வானில் தெரியும் சூப்பர் மூன் - நாசா அறிவிப்பு

சூப்பர் ப்ளூ மூன் வழக்கத்தை விட 30 சதவீதம் கூடுதல் பிரகாசமாக இருக்கும்.

Update: 2024-08-19 15:44 GMT

வாஷிங்டன்,

நிலவின் சுற்று வட்டப்பாதை மிக குறைவாக இருந்து, அதே நேரம் பவுர்ணமியாக நிலா காட்சியளித்தால், இதுவே ப்ளூ மூன் அல்லது நீல நிலவு என்பார்கள். இது வழக்கமாக தோன்றும் பவுர்ணமியை விடவும், கூடுதல் வெளிச்சத்துடன் பிரகாசமாக நிலவு தெரியும்.

இந்த மாத தொடக்கத்தில் நிலவு பூமியில் இருந்து 3,57,530 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அது தொடர்ந்து பூமிக்கு பக்கத்திலேயே அதாவது, 3,57,244 கிலோ மீட்டர் தூரத்தில் பூமியை சுற்றி வரும் நிலையில் தற்போது பவுர்ணமி

இன்று முதல் மூன்று நாட்களுக்கு, 'சூப்பர் ப்ளூ மூன்' என்னும் நீல நிற முழு நிலா வானில் தெரியும் என்று 'நாசா' அறிவித்துள்ளது. புதன்கிழமை வரை இந்த முழு நிலாவை பார்க்க முடியும். வழக்கமான பவுர்ணமி நிலாவை காட்டிலும், 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் பிரகாசமாகவும் இருப்பதே சூப்பர் ப்ளூ மூன் எனப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்