விண்வெளிக்கு சூடான மீன் குழம்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 3-வது முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ளார்.

Update: 2024-06-08 12:48 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். 58 வயதான சுனிதா ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் தற்போது 3-வது முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ளார். 3-வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றுள்ள சுனிதா, தன்னுடன் விநாயகர் சிலை மற்றும் சூடான மீன் குழம்பை தன்னுடன் கொண்டு சென்றுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தனது வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வை தரும் என அவர் கூறியுள்ளார். கடந்தமுறை அவர் சமோசாவை எடுத்துச் சென்றிருந்தார்.

அமெரிக்க கப்பல் படை விமானியான இவர், கடந்த 2006 மற்றும் 2012-ம் ஆண்டில் விண்வெளிக்கு சென்றிருந்தார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விண்ணில் நெடுநேரம் நடைபயின்ற முதல் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். 7 முறை விண்வெளியில் நடைபயின்ற சுனிதா மொத்தம் 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்