காசாவில் 2,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல்; இஸ்ரேல் பாதுகாப்பு படை

நேருக்கு நேரான போரில் பயங்கரவாதிகளை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

Update: 2023-11-05 08:37 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த அக்டோபர் 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்தது. இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது.

இந்த சம்பவத்தில், 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 241 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

தொடர்ந்து இருதரப்பிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர்.  இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டு உள்ள செய்தியில், நேருக்கு நேரான போரில் பயங்கரவாதிகளை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.

நேரடி வான் தாக்குதல்களை நடத்தி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் உட்கட்டமைப்புகள், ஆயுத கிடங்குகள், கண்காணிப்பு நிலைகள் மற்றும் அந்த அமைப்பின் தலைமையகங்களை அழிக்கும் பணியும் நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளது.

இதுவரை காசா முனையில், 2,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாத இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்