மின்சாரத்தை சேமிக்க 'டை' அணிவதை நிறுத்துங்கள்- ஸ்பெயின் பிரதமர்

மின்சாரத்தை சேமிக்க ‘டை’ அணிவதை நிறுத்துங்கள் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறுகிறார்.

Update: 2022-07-30 18:03 GMT

மாட்ரிட்,

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை வீசிவருவதால் அங்கு மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே வேளையில் உக்ரைன் போர் காரணமாக ரஷியாவிடம் இருந்து எரிவாயு இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் குறைந்துள்ளதால் மின்உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் அந்த நாடுகள் மின்சாரத்தை சேமிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் மின்சாரத்தை சேமிக்க பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் 'டை' அணிவதை நிறுத்த வேண்டும் என அந்த நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வினோதமான அறிவுரையை வழங்கியுள்ளார். 'டை' அணியாமல் இருப்பதன் மூலம் மக்கள் குளிர்ச்சியுடன் இருப்பார்கள் என்றும், இதனால் அவர்கள் ஏ.சி.யை குறைவாக பயன்படுத்துவார்கள் என்றும் இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும் பெட்ரோ சான்செஸ் கூறுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்