இஸ்ரேலுக்கு எதிரான தென் ஆப்பிரிக்காவின் வழக்கில் சேர சர்வதேச கோர்ட்டில் பாலஸ்தீன அரசு விண்ணப்பம்

இஸ்ரேல் மீது இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டி சர்வதேச கோர்ட்டில் தென்னாப்பிரிக்கா சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Update: 2024-06-03 18:42 GMT

கோப்புப்படம்

ஹேக்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 7 மாதங்களை கடந்து தீவிரமாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகி விட்ட நிலையில், ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக கருதப்படும் ரபா நகரில் இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தீவிரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.

இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75 சதவீத பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்ததது. இதனிடையே பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போர் தீவிரமானது என்றும், இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகிறது எனவும் தென் ஆப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை நாடியிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்திருந்தது.

இந்நிலையில் காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டிய தென் ஆப்பிரிக்காவின் வழக்கில் சேர அனுமதி கோரி பாலஸ்தீன அதிகாரிகள் சர்வதேச கோர்ட்டில் "பாலஸ்தீன மாநிலம்" சார்பாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்