உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றிச் சென்ற கப்பலில் தொழில்நுட்பக் கோளாறு! போஸ்பரஸ் ஜலசந்தியில் போக்குவரத்துக்கு இடையூறு!

உக்ரைனில் உள்ள துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல், திட்டமிடப்பட்ட பயணத்தில் இடையூறு ஏற்பட்டது.

Update: 2022-09-02 06:20 GMT

இஸ்தான்புல்,

உக்ரைனில் உள்ள துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல், இஸ்தான்புல் துறைமுகம் வரை செல்ல திட்டமிடப்பட்ட பயணத்தில் எதிர்பாராதவிதமாக இடையூறு ஏற்பட்டது.

உக்ரைனில் இருந்து 3,000 டன்களுக்கும் அதிகமான (3,307 டன்கள்) சோளத்தை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் 'லேடி செஹ்மா' 173 மீட்டர் நீளம் கொண்டது.

லேடி செஹ்மா கப்பல் தொழில்நுட்பக் கோளாறால் போஸ்பரஸ் ஜலசந்தியில் கரை ஒதுங்கியது. இதனால், வா்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்த கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.போஸ்பரஸ் ஜலசந்தியில் கடல் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இழுவை படகுகளை கொண்டு அந்த ராட்சத சரக்கு கப்பலை நகர்த்தும் பணிகள் சுமார் 2.5 மணி நேரமாக நடந்து வந்தன. தீவிர மீட்பு பணியின் பலனாக சரக்கு கப்பல் கரையை ஒட்டி நகர்த்தப்பட்டு மீண்டும் நங்கூரமிடப்படது. இதனால் போஸ்பரஸ் ஜலசந்தியில் கடல் கப்பல் போக்குவரத்துக்கு சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்