வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை: அதிபர் கிம் ஜாங் ஆலோசனை

உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டினார்.;

Update:2023-02-28 20:39 IST

பியாங்யாங்,

வடகொரிய நாட்டில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக்

சீனாவில் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

வடகொரியா அணு ஆயுதத்திற்கு அதிகம் செலவிட்டு வருவதாவும் பாலிஸ்டிக் உள்ளிட்ட ஏவுகணை சோதனைகளால் சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டினார். இதில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், விவசாய முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கபட்டது.

விவசாயம் குறித்து விவாதிக்க மட்டுமே கட்சியின் கூட்டம் கூட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதில் பேசிய அதிபர் கிம் ஜாங் நாட்டில் உணவு உற்பத்தி இலக்கை அடைவதே முதன்மையானது என்றும் மார்க்கெட்டில் உணவு பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்