ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் ஏன்.? ரிஷி சுனக் விளக்கம்

ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இன்று தாக்குதல் நடத்தி வருகின்றன.

Update: 2024-01-12 05:24 GMT

லண்டன்,

இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இன்று தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏமன் நாட்டின் சதா, அல்ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதற்கிடையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான காரணம் குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில்;

"ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகளின் வான்வழித் தாக்குதல்கள் தற்காப்புக்கானது மற்றும் அவசியமானது. சரக்கு கப்பல்களை வழிமறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். சர்வதேச அமைப்புகளின் எச்சரிக்கையை மீறி செங்கடலில் தாக்குதல் நடத்தியதால் பதிலடி கொடுக்கப்படுகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ராணுவத் திறன்களைக் குறைக்கவும், உலகளாவிய கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கவும் தாக்குதல் நடத்தப்படுகிறது." என்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்