லைவ் அப்டேட்ஸ்: கார்கிவில் ரஷிய படைகள் குண்டுவீசித் தாக்குதல் - 8 வயது குழந்தை உட்பட 15 பேர் பலி
உக்ரைன் மீது ரஷியா 121-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
சண்டை நடைபெற்று வரும் ரஷியா ஆக்கிரமித்துள்ள லூகன்ஸ் மாகாணத்தின் செவிரோடொனெட்ஸ்க் நகரில் இருந்து உக்ரைன் படைகள் பின்வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் படைகள் செவரோடோனெட்ஸ்கில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று பிராந்திய கவர்னர் செர்ஜி கெய்டே கூறியுள்ளார்.
நகரின் கிழக்கு பகுதியில் போர்க்களத்தில் ரஷிய வீரர்களுக்கு எதிரான வாரக்கணக்கான கடுமையான சண்டைகளை அடுத்து நகரை உள்ளடக்கிய லுகான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் செர்ஜி கெய்டே டெலிகிராமில் இதனை தெரிவித்து உள்ளார்.
உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், நேற்று அமெரிக்காவினால் வழங்கப்பட்ட பல-ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் உக்ரைனுக்கு வந்ததை அறிவித்தார். மேலும், இந்த சக்திவாய்ந்த கருவிகளை வழங்கியதற்காக அமெரிக்காவிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் சுமார் 4 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனின் பல பிராந்தியங்களில் தொடர்ந்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியாவின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு நகரமும் மக்கள் பாதுகாப்பான வாழ்வதற்கான இடமாக இல்லை என்று அம்மாகண கவர்னர் வேதனையும் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு மேலும் 450 மில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா அனுப்புகிறது. எல்லையை துல்லியமாக தாக்கும் நெடு தூர ராக்கெட் அமைப்புகள் உட்பட அமெரிக்கா அனுப்புகிறது. போரில் ரஷிய முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ள இது உதவும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீவ்,
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷிய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 8 வயது குழந்தை உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையேயான போர் 5 மாதங்களை நெருங்கி விட்ட நிலையில், கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து ரஷியா கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு உக்ரைனின் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 16 பேர் காயமடைந்ததாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.