ராணுவ திறனை அதிகரிக்க லேசர் துப்பாக்கி சோதனை நடத்திய ரஷியா
ராணுவ திறனை அதிகரிக்க லேசர் துப்பாக்கிகள் ரஷியா ராணுவ பயிற்சி மையத்தில் சோதனை செய்யப்பட்டது.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 18 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ரஷியா தனது ராணுவ திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டிரோன்களை தாக்கி அழிக்கும் சாடிரா லேசர், ஆயிரத்து 500 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள விண்கலங்களையும் செயலிழக்க செய்யும் பெரெஸ்வெட் லேசர் போன்றவற்றில் ரஷியா அதிக முதலீடு செய்துள்ளது.
இந்த லேசர் துப்பாக்கிகள் அங்குள்ள ராணுவ பயிற்சி மையத்தில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த லேசர் துப்பாக்கியானது அகச்சிவப்பு கதிர்களை தாக்கி அழிப்பதில் அதிக செயல்திறனை வெளிப்படுத்தியதாக ரஷிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.