கிரீமியா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற உக்ரைன்: ரஷியா கண்டனம்

கிரீமியா தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றது. இந்த சம்பவத்திற்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2023-08-14 21:23 GMT

கோப்புப்படம்

கீவ்,

உக்ரைனுக்கு சொந்தமான கிரீமியா பகுதியை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. மேலும் கிரீமியாவில் உள்ள பாலமானது இரு நாடுகளையும் இணைப்பதால் தற்போது நடைபெறும் போரில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் அந்த பாலம் மீது உக்ரைன் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்தவகையில் கிரீமியாவில் உள்ள பாலத்தை குறிவைத்து கடந்த வாரம் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் ரஷிய ராணுவத்தினர் அதனை முறியடித்தனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என ரஷியா குற்றம் சாட்டியது.

ஆனால் உக்ரைன் தரப்பில் எவ்வித தகவலும் அளிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக கிரீமியாவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார். இதற்கு ரஷிய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் உக்ரைனுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதி பூண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்