உக்ரைனிலிருந்து கப்பல் வழியாக உணவு ஏற்றுமதியை அனுமதிக்க தயார் - ரஷியா

ரஷியா மீதான தடைகளை விலக்கினால் உக்ரைனிலிருந்து கப்பல் வழியாக உணவு ஏற்றுமதிக்கு வழித்தடங்களை உருவாக்க தயார் என ரஷியா அறிவித்துள்ளது.

Update: 2022-05-25 11:40 GMT

மாஸ்கோ,

நேட்டோ என்னும் பாதுகாப்பு கூட்டணியில் சேர விரும்பிய உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போரை தொடங்கியது. கிழக்கு உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் டொனெட்ஸ்க் பகுதியில் சுவிட்லோடர்ஸ்க் என்ற நகரத்தை ரஷிய படைகள் நேற்று கைப்பற்றி உள்ளன.

இந்நிலையில், உக்ரைனில் மனிதாபிமான உணவு வழித்தடங்களை வழங்க ரஷியா தயாராக உள்ளது என அந்நாட்டு துணை வெளியுறவு மந்திரி ஆண்ட்ரே ருடென்கோ தெரிவித்தார்.

உக்ரைனின் கருங்கடலில் உள்ள துறைமுகங்கள் போருக்குப் பிறகு ரஷியாவால் முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, உக்ரைனில் 20 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தானியங்கள் கிடங்குகளில் சிக்கியுள்ளன.

உக்ரைனில் இருந்து உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு மனிதாபிமான உணவு வழித்தடங்களை உருவாக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "உணவுப் பிரச்சினைக்கு ஒரு விரிவான அணுகுமுறை தேவை. ரஷ்ய ஏற்றுமதிகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கு ஈடாக, உக்ரைனில் இருந்து உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு மனிதாபிமான உணவு வழித்தடங்களை உருவாக்க ரஷ்யா தயாராக உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் ரஷ்யா தொடர்பில் உள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்