ரஷியா: விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்; விமானி பலி

ரஷியாவில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர், உக்ரைன் எல்லையையொட்டி 93 மைல்கள் தொலைவில் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

Update: 2024-07-25 10:01 GMT

கோப்பு படம்

மாஸ்கோ,

ரஷியாவின் தென்மேற்கே கலுகா பகுதியில் மி-28 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்நிலையில், அந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

உக்ரைன் எல்லையையொட்டி 93 மைல்கள் தொலைவில் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கி, ஹெலிகாப்டரை ஓட்டி வந்த விமானி பலியானார்.

இதனை ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்து உள்ளது. இதுபற்றி நடந்த முதல்கட்ட விசாரணையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த பேரிடர் ஏற்பட்டு உள்ளது என அதுபற்றி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த தகவலை அந்நாட்டில் இருந்து வெளிவரும் டாஸ் மற்றும் இன்டர்பேக்ஸ் ஆகிய 2 செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. உக்ரைனுக்கு எதிராக 2 ஆண்டுகளாக ரஷியா போரில் ஈடுபட்டு வரும் சூழலில், இதில் உக்ரைனின் சதி திட்டங்கள் எதுவும் இருக்கின்றனவா? என்ற விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்