ஒரே ஆண்டில் 2 முறை பிறந்தநாள் கொண்டாடும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் - காரணம் என்ன?

இங்கிலாந்து அரச குடும்பத்தில் மன்னர்கள் சிலர் ஆண்டுக்கு 2 முறை பிறந்தாள் கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது.

Update: 2023-06-18 11:27 GMT

லண்டன்,

ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து கடந்த மே 6-ந்தேதி மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெற்ற நிலையில், அவரது 74-வது பிறந்தாள் விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நவம்பர் மாதம் 14-ந்தேதி பிறந்த மன்னர் சார்லஸ், தனது பிறந்தநாளை ஜூன் மாதம் கொண்டாடியதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உள்ளது.

இங்கிலாந்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் நிலவும் என்பதால், அந்த மாதங்களில் பிறந்த இங்கிலாந்து மன்னர்கள் அரண்மனைக்கு உள்ளேயே அரச குடும்பத்தினருடன் தனிப்பட்ட முறையில் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இதன் பின்னர் கோடைக்காலமான ஜூன் மாதத்தில் 2-வது முறையாக தங்கள் பிறந்தநாளை நாட்டு மக்களோடு சேர்ந்து பிரம்மாண்டமான முறையில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் மன்னர் 3-ம் சார்லஸின் பிறந்தநாள் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சார்லஸ் மன்னராக முடிசூட்டிய பின் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால், பிரிட்டன் அரச வம்சத்தைச் சேர்ந்த 1,400 வீரர்கள், 400-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட அணிவகுப்போடு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மன்னர் சார்லஸ் தனது 74-வது பிறந்தநாளை வரும் நவம்பர் மாதம் மீண்டும் ஒருமுறை கொண்டாட இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்