எகிப்து நாட்டின் பிரபல யோகா பயிற்சியாளர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு...!

எகிப்து நாட்டின் பிரபல யோகா பயிற்சியாளர்கள் ரீம் ஜபாக் மற்றும் நாடா அடெல் ஆகியோரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.

Update: 2023-06-25 10:53 GMT

கெய்ரோ,

4 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று எகிப்து சென்றடைந்தார். அவரை விமான நிலையத்தில் எகிப்து பிரதமர் வரவேற்றார்.

எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல்சிசியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், எகிப்து நாட்டின் பிரபல யோகா பயிற்சியாளர்களை பிரதமர்  நரேந்திர மோடி இன்று சந்தித்தார். ரீம் ஜபக் மற்றும்  நாடா அடெல் ஆகிய இருவரும் எகிப்தின் பிரபல யோகா பயிற்சியாளர்கள் ஆவர்.

யோகா மீது அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பாராட்டிய பிரதமர் மோடி இருவரையும் இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்