டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார் பிரதமர் மோடி...!
பப்புவா நியூ கினிவாவில் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.;
போர்ட் மோர்ஸ்பை,
பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என அறிவிக்கப்பட்டது. இதன் முதல் பகுதியாக, கடந்த 19-ந்தேதி அவர் ஜப்பான் சென்றார்.
இதில், ஜி-7 மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதன்பின்னர், பல்வேறு தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி விரிவாக பேசினார். ஜப்பான் நாட்டுக்கான பயணம் இன்றுடன் நிறைவடைந்த பின்னர் பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
அந்நாட்டின் விமான நிலையத்தில் சென்று இறங்கியதும், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் ஜேம்ஸ் மரேப் அவரை நேரில் வரவேற்றார்.
இந்நிலையில், பப்புவா நியூ கினிவாவில் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.