பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் தகுதி நீக்கம் - கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.;

Update:2023-04-12 03:30 IST

கோப்புப்படம்

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமராக இருந்து வருபவர் சர்தார் தன்வீர் இல்யாஸ். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த இல்யாஸ், கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது நாட்டின் நீதித்துறையை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல கோர்ட்டுகள் விளக்கம் கேட்டு இல்யாசுக்கு நோட்டீஸ் அனுப்பின.

மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஐகோர்ட்டில் இல்யாஸ் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இல்யாசை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்