பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
பிலிப்பைன்சில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.
மணிலா,
பிலிப்பைன்ஸ் தீவின் தலைநகர் மணிலாவில் இருந்து தென்மேற்கே 140 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ள ஹுக்கே நகர் அருகே இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இது பூமிக்கு அடியில் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது.
இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
பிலிப்பைன்சில் இதுபோன்ற ஆழ்ந்த நிலநடுக்கங்கள் பரவலாக உணரப்படுவது வழக்கம். எனினும், பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை என கூறப்படுகிறது.