பிரேசிலில் விமான நிலையத்தில் ஆபாச படம் ஒளிபரப்பு..!! - பயணிகள் அதிர்ச்சி

பிரேசிலில் விமான நிலையத்தில் உள்ள தகவல் திரையில் ஆபாச படம் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2022-05-29 02:27 GMT

பிரேசிலியா,

பிரேசில் நாட்டின் மிகப்பெரிய கடற்கரை நகரமான ரியோ டீ ஜெனிரோ நகரில் சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. இந்த விமான நிலையம் நேற்று முன்தினம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

அப்போது விமான நிலையத்தில் விமானங்கள் வருகை குறித்த தகவல்களை அறிவிக்கும் திரையில் திடீரென ஆபாச படங்கள் ஓட தொடங்கின. இதனால் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

சில பயணிகள் ஆபாச படங்கள் ஓடிய திரையை பார்த்து சிரித்தபடி நகர்ந்து சென்றாலும், பெரும்பாலானோரை இது முகம் சுளிக்க வைத்தது. பலர் தங்கள் கண்களை மூடிக்கொண்டனர். மேலும் தங்கள் குழந்தைகள் திரையை பார்க்கவிடாமல் மறைத்துக்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ஹேக்கர்கள் விமானநிலையத்தின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து விளம்பர திரையில் ஆபாச படங்களை ஒளிபரப்பி இருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்