ஹாங்காங், ஜெருசலேமை சேர்ந்தவர்கள் உள்பட கத்தோலிக்க சபைக்கு 21 புதிய கர்தினால்கள் - போப் ஆண்டவர் அறிவிப்பு

பல்வேறு நாடுகளை சேர்ந்த 21 பேராயர்கள், புதிய கர்தினால்களாக நியமிக்கப்பட உள்ளதாக போப் ஆண்டவர் அறிவித்துள்ளார்.

Update: 2023-07-09 23:10 GMT

கோப்புப்படம் 

வாடிகன் சிட்டி,

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போப் ஆண்டவர் உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில கர்தினால்கள் உள்ளனர். இவர்களே போப் ஆண்டவரை தேர்வு செய்கின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 21 பேராயர்கள், புதிய கர்தினால்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்த அறிவிப்பை போப் பிரான்சிஸ் நேற்று வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த வாராந்திர நிகழ்ச்சியில் வெளியிட்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கர்தினால்களில் அர்ஜென்டினாவை சேர்ந்த பேராயர் விக்டர் மனுவேல் பெர்னாண்டஸ் உள்ளிட்ட முக்கியமானவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதைத்தவிர கத்தோலிக்கர்கள் சிறுபான்மையினராக உள்ள ஹாங்காங்கை சேர்ந்த பேராயர் ஸ்டீபன் சாவ்-யான் சோவ், ஜெருசலேமை சேர்ந்த பியர்பாட்டிஸ்டா பிஸபெல்லா ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்கள் 21 பேரும் செப்டம்பர் 30-ந் தேதி முறைப்படி நியமிக்கப்படுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்