ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமருக்கு ஓவியத்தை பரிசாக வழங்கிய பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் மோடி ஓவிய பரிசை வழங்கினார்.

Update: 2022-05-24 17:11 GMT

image tweeted by@ PBNS_india

டோக்கியோ,

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்க்கு மோடி, கோண்ட் கலை ஓவியத்தை பரிசாக வழங்கினார்.

கோண்ட் ஓவியங்கள் மிகவும் போற்றப்படும் பழங்குடியினரின் கலை வடிவங்களில் ஒன்றாகும். 'கோண்ட்' என்ற வார்த்தை 'கோண்ட்' என்ற சொல்லிலிருந்து வந்தது, அதாவது 'பச்சை மலை'.

இருதரப்பு உறவை நேர்மறையான முறையில் தொடர இரு பிரதமர்களும் தங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்தினர். அப்போது விரைவில் இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

மேலும், ஜப்பானிய பிரதமருக்கு ரோகன் ஓவியம் வரைந்த மரத்தால் செய்யப்பட்ட கைவினைப் பெட்டியையும், அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு சஞ்சி கலைப் படைப்பையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். 


Tags:    

மேலும் செய்திகள்