அதிக நேரம் போன் யூஸ் பண்ணுபவர்களே உஷார்..! - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அதிகம் பயன்படுத்தும் சிறார்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2023-04-11 14:07 GMT

ஸ்மார்ட் போன்கள் அதிகம் பயன்படுத்தும் சிறார்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரேசிலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 14 முதல் 18 வயதுடைய சிறார்களிடம் ஆய்வுகள் நடத்தினர். அதில் ஒருநாளைக்கு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு, முதுகுவலி பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஸ்மோர்ட்போன் மோகத்தால் சிறுவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்