இத்தாலியில் ஆரஞ்சு பழத்தை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்ட மக்கள்...
இத்தாலி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆரஞ்ச் பழ சண்டை இம்முறை களைகட்டியது.
ரோம்,
இத்தாலி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆரஞ்ச் பழ சண்டை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இம்முறை களைகட்டியது. குதிரை வண்டியில் பழங்கால வீரர்களின் உடை அணிந்து வருபவர்கள், நகரின் மைய பகுதியில் கூடியிருக்கும் மக்கள் மீது ஆரஞ்ச்பழத்தை ஏறிகின்றனர்.
பதிலுக்கு மக்களும் அவர்கள் மீது ஆரேஞ்சு பழத்தை ஏறிந்து மகிழ்கின்றனர். ஆரஞ்ச் பழத்தை , முன்பொரு காலத்தில் தங்களை ஆண்ட கொடுங்கோல் ஆட்சியாளரின் தலையாக இத்தாலி கருதுகிறார்கள்.