அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜினை அணைக்க முயன்ற பயணியால் பரபரப்பு
அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜினை அணைக்க முயன்ற பயணியை போலீசார் கைது செய்தனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள எவரெட் விமான நிலையத்தில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 84 பேர் பயணம் செய்தனர்.
அப்போது பயணி ஒருவர் திடீரென அங்கிருந்த தீயணைப்பானின் கைப்பிடியை இழுத்து விமானத்தின் என்ஜினை அணைக்க முயன்றதாக கூறப்படுகிறது. சுதாரித்து கொண்ட விமானி உடனடியாக போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். இந்த சம்பவத்தால் பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து விமான நிலையத்தில் தயாராக இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஜோசப் டேவிட் எமர்சன் என்பதும், அவர் ஒரு விமானி என்பதும் தெரிய வந்தது. அவர் எதற்காக? அவ்வாறு செய்ய முயன்றார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.