இஸ்ரேலில் ராணுவம் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் காயம்
இஸ்ரேலில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.
ஜெருசலேம்,
பாலஸ்தீனத்துக்கு சொந்தமான மேற்கு கரை பகுதி தற்போது இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனியர்கள் அவ்வப்போது இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நாப்லஸ் நகருக்கு அருகில் உள்ள பெய்ட் டஜான் மற்றும் பெய்ட்டா ஆகிய கிராமங்களில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலஸ்தீனியர்கள் அவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் ரப்பர் குண்டுகளால் அவர்களை சுட்டனர்.
இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்களை கண்ணீர் புகைக்குண்டு வீசி ராணுவ வீரர்கள் கலைத்ததில் டஜன் கணக்கானோர் காயம் அடைந்தனர்.