காசாவுக்கு உதவிகளை அனுப்புவது சவாலாக உள்ளது - பாலஸ்தீன பிரதமர் கவலை

சர்வதேச நாடுகள் அனுப்பி வரும் மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது.

Update: 2024-04-18 23:46 GMT

கோப்புப்படம்

ரமல்லா,

இஸ்ரேல்-ஹமாஸ் போர் 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் மூர்க்கத்தனமான தாக்குதல்களால் அந்த நகரம் சின்னாபின்னமாகி வருகிறது. அங்குள்ள பல லட்சம் மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு சர்வதேச நாடுகள் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வருகிறது. ஆனால் காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது.

இந்த நிலையில் பாலஸ்தீனத்தில் இருந்தும் காசாவுக்கு உதவிகளை அனுப்புவது பெரும் சவாலாக உள்ளதாக பாலஸ்தீன அதிபர் முகமது முஸ்தபா கவலை தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் முஹன்னத் ஹாதி உடனான சந்திப்பின்போது முகமது முஸ்தபா இதனை தெரிவித்தார். காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நா.வையும், சர்வதேச சமூகத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்