தொற்று அதிகரிப்பு: பாகிஸ்தானில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்
தொற்று அதிகரிப்பால் பாகிஸ்தானில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.;
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் தொற்றால் உயிரிழந்துள்ளார். தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அங்கு தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் (என்.சி.ஓ.சி.) விதித்துள்ள கொரோனா கால கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அங்கு 2 வருடங்களாக அமலில் இருந்து வந்த கொரோனா கால கட்டுப்பாடகள் கடந்த மார்ச் மாதம்தான் முடிவுக்கு வந்தது என்பது நினைவுகூரத்தக்கது.