பாகிஸ்தானில் 8 மாத குழந்தைக்கு போலியோ; நடப்பு ஆண்டில் 11 பேருக்கு பாதிப்பு
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் 8 மாதக் குழந்தைக்கு போலியோ தொற்று பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இஸ்லமாபாத்,
உலகில் போலியோ பாதிப்பு காணப்படும் சில நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. போலியோ தடுப்பு மருந்துக்கு எதிரான பொய் பிரசாரம் பரப்பப்படுவதால் முழுமையாக போலியோவை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது.
அந்த வகையில், பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் 8 மாதக் குழந்தைக்கு போலியோ தொற்று பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. புதிதாக போலியோ தொற்றுக்கு பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை மிர் அலி பகுதியைச் சேர்ந்ததாகும். இதையடுத்து வடக்கு வஜிரிஸ்தானில் மொத்த பாதிப்பு 11 ஆக அதிகரித்துள்ளது.