"பொருளாதார ரீதியாக சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அடிமைப்பட்டுள்ளது" - ஷெபாஸ் ஷெரீப்

சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் அடிமைப்பட்டுள்ளதாக ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

Update: 2022-08-04 15:58 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) அந்நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவி கோரியுள்ளது.

மேலும் பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியம் தேவையான நிதியை விடுவிக்க உதவ வேண்டும் என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் தற்போது வரை சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு நிதியை விடுவிக்கவில்லை.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் அடிமைப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், பொருளாதார ரீதியாக சர்வதேச நாணய நிதியத்திற்கு அடிமைப்பட்ட நிலையில் நாம் இதுவரை என்ன செய்துள்ளோம்? பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டுக் கொண்டு வர பல சவாலான முடிவுகளை நாம் எடுத்து வருகிறோம்" என்று கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்