பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதை 'ஒரு நாடு' தடுத்தது - இந்தியா மீது பாக். மறைமுக குற்றச்சாட்டு

சீனா நடத்திய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை ஒரு நாடு தடுத்தது என இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுக குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2022-06-27 12:28 GMT

Image Courtesy : AFP 

லாகூா்,

சீனா தலைமையில் நடைபெற்ற 14-வது பிரிக்ஸ் மாநாடு கடந்த 23-ந் தேதி பீஜிங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரிக்ஸ் குழுவின் ஒரு உறுப்பினர் தடுத்தது என இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அலுவலகம் தொிவிக்கையில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் 14-வது உச்சிமாநாட்டில், உலக வளர்ச்சி குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வளரும் மற்றும் வளா்ந்து வரும் பொருளாதார நாடுகள் பங்கேற்க அழைக்கப்பட்டன.

பிரிக்ஸ் மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாதவா்களுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுப்பது தொடா்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என சீனா தொிவித்தது. ஆனால் வருந்தத்தக்க வகையில் இதில் பாகிஸ்தான் பங்கேற்பதை ஒரு உறுப்பினா் தடுத்து உள்ளது. என இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் தொிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்