உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ குழுக்கள் காசாவிற்கு விரைந்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் - ஹமாஸ் கோரிக்கை

காசா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 297 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2023-12-12 03:53 GMT

காசா,

காசாவில் இஸ்ரேல் படையினர் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து ஹமாஸ் சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்- கத்ரா கூறுகையில்,

உலகம் முழுவதுமிருக்கும் மருத்துவக் குழுக்கள் உடனடியாக காசா விரைந்து வந்து, அங்கு சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற காசாவிலிருந்து வெளியேற தயாராக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காசா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 297 பேர் உயிரிழந்துள்ளனர். 550-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இத்துடன், கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 49,500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்