உலக மக்கள் தொகையில் இந்தியாவுக்கு முதல் இடம் - சீனா சொல்வது என்ன?

மக்கள் தொகையில் இந்தியா முதல் இடத்திற்கு வந்துள்ளது தொடர்பாக சீனா கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2023-04-19 19:33 GMT

கோப்புப்படம்

பீஜிங்,

உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது என ஐ.நா. மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி, சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என தெரிவித்துள்ளது.

இது குறித்து, பீஜிங்கில் நேற்று நிருபர்களிடம் பேசிய சீன வெளியறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

மக்கள் தொகை பங்களிப்பு அளவைச் சார்ந்தது அல்ல அது தரத்தைச் சார்ந்தது. மக்கள் தொகை முக்கியம், அதே போன்றுதான் திறமையும். சீனாவின் மக்கள் தொகை 140 கோடியைத்தாண்டும். தரமான பணியாளர் வர்க்கத்தினர் 90 கோடி பேர் இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்