அமெரிக்காவில் பெண் டாக்சி டிரைவர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் பெண் டாக்சி டிரைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் சவுத் சார்லஸ்டன் அருகே உள்ள கிளார்க் கவுண்டியை சேர்ந்தவர் லோலிதா ஹால் (61). தனியார் நிறுவனத்தின் டாக்சி டிரைவராக பணி புரிந்து வந்தார்.
சம்பவத்தன்று அதேப்பகுதியை சேர்ந்த வில்லியம் பிராக் என்பவருடைய வீட்டின் முன்னால் தன் காரை ஹால் நிறுத்தியுள்ளார். பின்னர் காரில் இருந்து இறங்கி பயணி ஒருவருக்காக ஹால் காத்திருந்தார். அப்போது லோலிதா ஹாலை நோக்கி துப்பாக்கியால் பிராக் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து லோலிதா ஹால் இறந்தார்.