ஒடிசா ரெயில்கள் விபத்து: நேபாள பிரதமர் இரங்கல்

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேபாள பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-03 02:19 GMT

காத்மாண்டு,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 233 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேபாள நாட்டின் பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இன்று இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் ஏராளமான உயிர்கள் பலியாகியிருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது.

இந்த துக்க நேரத்தில் விபத்தில் இறந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்