'ரஷியா உடனான நட்பு பலப்படுத்தப்படும்'- கிம் ஜாங் அன்
ரஷியா உடனான நட்பு மேலும் பலப்படுத்தப்படும் என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறியுள்ளார்.
பியாங்காங்,
ரஷியா நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர் ஷெர்ஜி ஷோய்கு. தற்போது அந்த நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக உள்ளார். இவர் அரசுமுறை பயணமாக வடகொரியா சென்றார். அப்போது வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் இருதரப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷியா ராணுவம் சுமார் 2½ ஆண்டுகளாக உக்ரைன் உடன் போர் நடத்தி வரும்நிலையில் ரஷியா ராணுவத்திடம் ஆயுதங்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ரஷியா ராணுவம், நட்பு நாடுகளிடம் ஆயுதங்களை பெற்று வருவதாக குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை அரங்கேறி உள்ளது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரஷியா உடனான நட்பு மேலும் பலப்படுத்தப்படும் என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பேசியுள்ளார்.