வேதியியலுக்கான நோபல் பரிசு - 3 பேருக்கு அறிவிப்பு

வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-04 10:31 GMT

ஸ்டாக்ஹோம்,

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் சபை செயலாளர் தாமஸ் பெர்ல்மன் அறிவித்தார். இதன்படி மருத்துவம், இயற்பியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்புக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் சபை தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்