2024ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2024ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.;
ஸ்டாக்ஹோம்,
உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வை (RNA) கண்டுபிடித்ததற்காக விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஜான் ஜே. ஸ்கோப்பீல்ட் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஜொரிப் இ. ஹிண்டன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. செயற்கை நரம்பியல் நெட்வொர்க் தொடர்பான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.