இந்தியா அளித்த நிதியுதவியுடன் நேபாளத்தில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு..!
இந்தியாவின் ரூ.3.63 கோடி உதவியுடன் நேபாளத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கூடக் கட்டிடங்கள் திறக்கப்பட்டன.
காத்மாண்டு,
இந்தியாவின் நேபாள ரூ.3.63 கோடி உதவியுடன் நேபாளத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கூடக் கட்டிடங்கள் திறக்கப்பட்டன.
காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொறுப்பாளர் நம்க்யா சி. கம்பா, புதிய பள்ளிக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இந்திய அரசின் மானிய உதவியின் கீழ், காஸ்கி மாவட்டம், தண்ட் பென்சி, பொக்ரா மெட்ரோபாலிடன் சிட்டி-13 இல் உள்ள ஸ்ரீ அர்வா பிஜயா மேல்நிலைப் பள்ளி கட்டிடம் திறப்புவிழா கண்டது.
நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் விதமாக "இந்தியா-75 ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" இன் ஒரு பகுதியாக நேபாளத்தில் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட 75 திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.இந்த திட்டம் கல்வித் துறையில் இந்தியா-நேபாள மேம்பாட்டுக் கூட்டுறவின் கீழ், சமூக மேம்பாட்டுத் திட்டமாகத் தொடங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
2003 ஆம் ஆண்டு முதல், இந்தியா நேபாளத்தில் 527 உயர் தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது மற்றும் 7 மாகாணங்களிலும் சுகாதாரம், கல்வி, குடிநீர், இணைப்பு, சுகாதாரம் மற்றும் பிற பொதுப் பயன்பாடுகளை உருவாக்குதல் ஆகிய துறைகளில் 470 திட்டங்களை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.