கனடாவில் மக்களின் கருத்து சுதந்திரத்தை அழிக்க அரசாங்கம் முயற்சி - எலான் மஸ்க் குற்றச்சாட்டு
கனடாவில் மக்களின் கருத்து சுதந்திரத்தை அழிக்க அரசாங்கம் முயற்சி செய்வதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.;
ஒட்டாவா,
கனடாவில் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு எதிராக புதிய சட்டத்தை அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்தினார். ஸ்ட்ரீமிங் என்பது ஆன்லைன் நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு சேவை ஆகும். இதன்மூலம் மக்கள் தங்களது கருத்தினை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். ஆனால் அதற்கு எதிராக தற்போது சில கட்டுப்பாடுகள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உலக பணக்காரரும், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் செயலியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த சட்டத்தின் மூலம் கனடாவில் மக்களின் கருத்து சுதந்திரத்தை அழிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடான ஒன்று. எனவே இதனை கைவிட வேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.