குரங்கு அம்மை நோய்: தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-07-15 17:22 GMT

ஜெனீவா,

குரங்கு அம்மை நோய் தற்போது 55 நாடுகளில் பரவி உள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தார், நண்பர்கள் என நெருங்கிய தொடர்பில் இருந்த 11 பேரிடம் நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள குரங்கு அம்மை நோயால் தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. குரங்கு அமைப்பு நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பகுதிக்கான இயக்குநர் பூனம் சிங் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை நோய் பாதிப்பு திறனை மதிப்பீடு செய்வதற்கும், நோய் பாதிப்பு தடுப்பு திறனை வலுப்படுத்துவதற்கும் இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்