காஷ்மீர் வரும் உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா...!!!

உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா ஒரு நாள் சுற்றுப்பயணமாக காஷ்மீருக்கு வருகிறார்.;

Update:2023-08-27 17:45 IST

Credit : Instagram@karolinabielawska

ஸ்ரீநகர்,

2021-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றவர், போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா.  அவர் அமெரிக்கா, இந்தோனேஷியா, மெக்சிகோ மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை வீழ்த்தி உலக அழகி பட்டத்தை வென்றார்.

இந்நிலையில் உலக அழகி கரோலினா பைலவ்ஸ்கா ஒரு நாள் சுற்றுபயணமாக நாளை(திங்கள்கிழமை) காஷ்மீருக்கு வரவிருக்கிறார். கரோலினா, மிஸ் வேர்ல்ட் இந்தியா சினி ஷெட்டி மற்றும் மிஸ் வேர்ல்ட் கரீபியன் எம்மி பெனா உட்பட சக போட்டி வெற்றியாளர்களுடன் வருகிறார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் உலக அழகி கரோலினா பைலவ்ஸ்கா இந்தியாவிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டின் இறுதியில் 71-வது உலக அழகி 2023 போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. கடைசியாக 1996-ல் உலக அழகி போட்டியை இந்தியா நடத்தியது. அதன்பின்னர் 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தியா உலக அழகி போட்டியை நடத்த உள்ளது. உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்