மாலத்தீவில் இருந்து இந்திய படையின் முதல் குழுவினர் அடுத்த மாதம் வெளியேறுவர் - அதிபர் முய்சு

மாலத்தீவில் இருந்து இந்திய படையின் முதல் குழுவினர் அடுத்த மாதம் வெளியேறுவர் என அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-05 08:19 GMT

மாலி,

இந்தியாவுக்கு அருகே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மாலத்தீவு. இந்நாட்டில் இந்திய படை வீரர்கள் 88 பேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மாலத்தீவு புதிய அதிபராக முகமது முய்சு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மாலத்தீவில் உள்ள இந்திய படை வீரர்கள் 88 பேரையும் மார்ச் 15ம் தேதிக்குள் திரும்பப்பெறும்படி இந்தியாவுக்கு, அதிபர் முய்சு வேண்டுகோள் விடுத்தார். படை வீரர்கள் விவகாரம் தொடர்பாக இருநாட்டு உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள முகமது முய்சு முதல் முறையாக இன்று மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அதிபர் முய்சு பேசுகையில், மாலத்தீவில் இருந்து இந்திய படையின் முதல் குழுவினர் அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் வெளியேறுவர். எஞ்சிய இந்திய படையினர் மே 10ம் தேதிக்குள் வெளியேறுவர். நாட்டின் இறையாண்மையை சமரசம் செய்யும்வகையில் எந்த நாட்டுடனும் ஒப்பந்தம் செய்யப்படாது. மாலத்தீவில் இருந்து வெளிநாட்டு ராணுவத்தை வெளியேற்றி இழந்த கடல் எல்லைகளை மீண்டும் திரும்பப்பெறுவர் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான மக்கள் எங்கள் அரசை ஆதரித்துள்ளனர் என நம்புகிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்