ரஷிய பொருட்களின் போக்குவரத்துக்கு தடை; எந்த சலுகையும் வழங்க முடியாது – லிதுவேனியா அறிவிப்பு

கலினின்கிராட் வழியாக ரஷிய பொருட்களின் போக்குவரத்தில் எந்தவித சலுகைகளையும் வழங்க முடியாது என்று லிதுவேனியா தெரிவித்துள்ளது.

Update: 2022-06-26 10:04 GMT

வில்னியஸ்(லிதுவேனியா),

கலினின்கிராட் வழியாக ரஷிய பொருட்களின் போக்குவரத்தில் எந்தவித சலுகைகளையும் வழங்க முடியாது என்று லிதுவேனியா தெரிவித்துள்ளது.

அண்டை நாடான கலினின்கிராட் வழியாக ரஷிய பொருட்களின் போக்குவரத்தை தடை செய்வதில் எந்த சலுகையும் வழங்க லிதுவேனியா மறுத்து விட்டது. இது ரஷியா-நேட்டோ இடையேயான மோதலை தூண்டக்கூடிய ஒரு விரிவாக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

பால்டிக் கடலில் அமைந்துள்ள கலினின்கிராட்,  லிதுவேனியா வழியாக ரஷியாவிற்கான ரெயில் இணைப்பையும் பரவலாகப் பயன்படுத்துகிறது.

ரஷியா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு இணங்கி செயல்படும் லிதுவேனியா, ரஷியாவின் ஸ்டீல் மற்றும் பிற இரும்பு உலோகங்களின் போக்குவரத்தை தடை செய்து ரெயில் பாதையை தடுத்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கையானது பயணிகளுக்கான ரெயில் மற்றும் சரக்குகளை பாதிக்காது என்று அந்நாட்டின் பிரதமர் கூறினார்.

லிதுவேனியாவின் அதிபர் கிடானாஸ் நவ்சேடா கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் லிதுவேனியா இணைந்த 2004 முதல், கலினின்கிராட் போக்குவரத்து சுதந்திரமாக இயங்குகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லிதுவேனியாவும் இணைந்து செயல்படுகின்றன. மேலும் ரஷியாவிற்கு எதிரான 4-வது கட்ட பொருளாதாரத் தடைகளை செயல்படுத்துவதில் தீவிரமாக பங்கேற்றுள்ளன,

"லிதுவேனியா எல்லை வழியாக கொண்டு செல்லப்படும் பொருட்களின் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்க நாங்கள் எப்போதும் வேண்டும். மேலும் ரஷியாவிற்கு சலுகைகள் அளிக்கவோ மற்றும் அந்நாட்டின் பொருட்களை கொண்டு செல்ல பாதுகாப்பான வழித்தடங்கள் அமைப்பது பற்றியோ பேச்சுவார்த்தை நடத்த முடியாது" என்று லிதுவேனியாவின் அதிபர் கிடானாஸ் நவ்சேடா கூறினார்.

இது குறித்து ரஷிய தரப்பில் கூறியதாவது, "இது வருந்தத்தக்கது, அவர்கள் இனி எங்கள் கூட்டாளிகள் அல்ல, அவர்கள் இப்போது எங்கள் எதிரிகள், நாங்கள் பொறுத்திருந்து நல்ல முடிவை எடுப்போம்" என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்