10 ஆண்டுகளுக்கு பிறகு லிபியா-இத்தாலி இடையே நேரடி விமான சேவை
10 ஆண்டுகளுக்கு பிறகு லிபியா-இத்தாலி இடையே நேரடி விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
திரிபோலி,
ஆப்பிரிக்க நாடான லிபியாவின் முன்னாள் அதிபர் முகமது கடாபி. சர்வாதிகாரியான இவர் கடந்த 2011-ம் ஆண்டு அங்குள்ள கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து லிபியா உடனான விமான போக்குவரத்துக்கு இத்தாலி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன.
இந்தநிலையில் லிபிய விமான நிறுவனமான மெட்ஸ்கி ஏர்வேஸ் மூலம் இத்தாலிக்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள மிட்டிகா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இத்தாலியின் பியூமிசினோ விமான நிலையத்துக்கு எம்.டி-522 என்ற விமானம் இயக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட இந்த விமான சேவைக்கு லிபியா பிரதமர் அப்துல் ஹமீத் டிபீபா பாராட்டு தெரிவித்துள்ளார்.