லிபியாவில் அவசர நிலை பிரகடனம்

லிபியாவில் வன்முறை அதிகம் உள்ள பகுதிகளில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-08-17 21:03 GMT

திரிபோலி,

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சர்வாதிகாரியாக செயல்பட்ட அதிபர் முகமது கடாபி 2011-ம் ஆண்டு பொதுமக்கள் கிளர்ச்சியின்போது படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு அங்கு பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் தோன்றின.

இந்தநிலையில் அங்குள்ள முக்கிய கிளர்ச்சி குழுவான 444 படைப்பிரிவின் தளபதி மஹ்மூத் ஹம்சா மிட்டிகாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அவரை சிறப்பு படைப்பிரிவினர் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் இந்த வன்முறையால் அங்கு அப்பாவி பொதுமக்கள் உள்பட 55 பேர் உயிரிழந்தனர். 126 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு வன்முறை அதிகம் உள்ள பகுதிகளில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்