வெனிசுலாவில் கனமழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு
வெனிசுலாவில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
கரகஸ்,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் லாஸ் தெஜேரியாஸ் மாகாணத்தை ஜூலியா புயல் தாக்கியது. கனமழை மற்றும் புயல் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில் வெனிசுலாவின் மத்திய மாகாணமான அரகுவாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 60 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் அரகுவா மாநிலத்தில் உள்ள லாஸ் டெஜெரியாஸ் நகரில் நிலச்சரிவு மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதாகவும், அது 100ஐ தாண்டும் என அஞ்சப்படுவதாகவும் வெனிசுலாவின் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.