ரஷிய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டு இருக்கிறோம்: உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "ரஷிய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டுள்ளோம். அந்நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ளது" என்றார்.

Update: 2022-11-12 10:55 GMT

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதில் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. கெர்சன் நகரை மீட்டு உக்ரைன் படை கடுமையாக சண்டையிட்டு வந்தது. இந்தநிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஷியா அறிவித்தது.

இதையடுத்து அங்கிருந்து ரஷிய படைகள் வெளியேறின. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "ரஷிய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டுள்ளோம். அந்நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ளது" என்றார். ரஷிய படைகள் வெளியேறியதையடுத்து கெர்சன் நகருக்குள் உக்ரைன் ராணுவம் நுழைந்தது. மேலும் கெர்சனில் வசித்த மக்களும் அந்நகருக்குள் மீண்டும் வந்தனர்.

சாலைகளில் குவிந்த மக்கள் உக்ரைனுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிவிட்டு உக்ரைன் தேசிய கொடியை ஏற்றினார்கள். இது தொடர்பாக வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கிடயே கெர்சன் நகரில் ரஷியப் படையினர் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

இதனால் தேடுதல் நடவடிக்கை முடியும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் ராணுவத்தினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். உக்ரைன் விவகாரத்தில் ரஷியா- அமெரிக்கா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனின் 2 சகோதரர்கள், ஒரு சகோதரி உள்பட 200 பேர் ரஷியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்