ஜி-7 மாநாட்டுக்கு முன்னர் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் ஜப்பான் பிரதமர்

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் வருகிற 19-ந் தேதி ஜி-7 மாநாடு நடைபெற உள்ளது.

Update: 2023-05-02 18:07 GMT

டோக்கியோ, 

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் வருகிற 19-ந் தேதி ஜி-7 மாநாடு நடைபெற உள்ளது. தற்போது ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்த மாநாட்டுக்கு முன்னர் தென்கொரியா செல்ல திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர், `வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், இரு நாடுகளின் உறவுகளை வளர்ப்பதற்கான வாய்ப்பாக அது அமையும் எனவும் அவர் கூறினார். மேலும் இந்த பயணத்தின்போது வேகமாக மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகள் குறித்து வெளிப்படையாக கருத்துகளை பரிமாறிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்' எனவும் அவர் தெரிவித்தார்.

ஜப்பான் மற்றும் தென்கொரிய கடற்பகுதிகளில் வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும் வடகொரியா மற்றும் சீனாவில் இருந்து இரு நாடுகளும் பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இந்த சூழ்நிலையில் தென்கொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மேற்கொள்ள உள்ள இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்