ரன்வேயில் திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்.. டோக்கியோ விமான நிலையத்தில் பரபரப்பு
ரன்வேயில் தரையிறங்கும்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டோக்கியோ:
ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. ரன்வேயில் தரையிறங்கும்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் துணையுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் சுமார் 400 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இந்த விபத்து காரணமாக விமான நிலையத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.